நாகாலாந்தில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொகிமா & கெளஹாத்தி:

நாகாலாந்து மற்றும் அஸ்ஸாமில் நடந்த குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆகஉயர்ந்துள்ளது.

நேற்று கொகிமாவில் திமாபூர் ரயில் நிலையத்திலும் ஹாங்காங் மார்க்கெட் என்ற பகுதியிலும் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் 36 பேர் பலியானார்கள்.100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபார்வையிட்டார். தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்புகள் எதுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதேபோல் அசாம் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் 24 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த போடோலாந்து தேசியஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது.

ஒரே நாளில் 60 பேர் வெடிகுண்டு தாக்குதலில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ஐநா பொதுச் செயலாளர் கோபி அன்னான்ஆகியோர் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் நிலைமையை நேரில் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று அசாம்மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+