இராக் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியர்களை காத்த சென்னை: கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல சென்னை டாக்டர் கே.எம்.செரியனின் இருதய நோய் மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட ஈராக்குழந்தைகளுக்கு இலவசமாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட தகவல் இராக் தீவிரவாதிகளுக்குதெரிவிக்கப்பட்டதன் எதிரொலியாகவே கடத்தப்பட்ட 3 இந்தியர்களை அவர்கள் விடுவித்ததாக குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் ஒரு நாள் பயணமாக சென்னை வந்தார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்நடந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சியைப் பார்வையிட்ட அவர் பின்னர் முகப்பேரில் உள்ள டாக்டர் செரியனின்சர்வதேச இருதய நோய் மருத்துவனைக்கு சென்றார்.

அங்கு புதிய பிரிவைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், டாக்டர் செரியனின் மருத்துவமனையில் இராக்குழந்தைகளுக்கு இலவசமாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்படுவது எனக்கு தெரியவில்லை.

சமீபத்தில் 3 இந்தியர்கள் இராக்கில் தீவிரவாதகிளால் பிடித்து வைக்கப்பட்டிருந்தபோது, செரியன் எனக்கு ஒருகடிதம் எழுதியிருந்தார். அதில் இந்த ஆண்டு இதுவரை 20க்கும் மேற்பட்ட இராக் குழந்தைகளுக்கு இலவசமாகமாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தத் தகவல்களை தீவிரவாதிகளுக்கு தெரிவித்துஇந்தியர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அதில் கோரியிருந்தார்.

அப்போதுதான் இராக் குழந்தைகளுக்கு இங்கு பெரியஅளவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது, அதுவும்இலவசமாக தரப்படுவது எனக்குத் தெரிய வந்தது. உடனடியாக இத்தகவலை வெளியுறவுத் துறைக்கு தெரிவித்துஆவண செய்யுமாறு கோரினேன்.

இந்தத் தகவல் தீவிரவாதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும், அதைத் தொடர்ந்துதான் அவர்கள் இந்தியர்களைவிடுவித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

டாக்டர் செரியனின் நல்லெண்ணம் இன்று 3 இந்தியர்களைக் காப்பாற்றியுள்ளது. அவரது முயற்சிகள் மேலும்வலுவுடன் திகழ்ந்து பலருக்கும் உதவ வேண்டும்.

டாக்டர் செரியனுக்கு இன்னொரு வேண்டுகோள். மனித இதயங்கள் அனைத்தும் ஒன்றுதான். ஒரே மாதிரிவடிவம், ஒரே மாதிரியான துடிப்பு. உலகின் எந்த மூலையில் உள்ள மனிதனுக்கும் இருதயம் ஒன்றுதான்.

நான் செரியனைக் கேட்டுக் கொள்வது, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் இங்கே அழைத்து வாருங்கள்.இதயங்கள் அனைத்தும் ஒன்றே, பிறகு ஏன் உங்களுக்குள் பிரிவினை என்று அவர்களிடம் விளக்கிக் கூறுங்கள்.அதன் பிறகு அவர்கள் உண்மையை உணர்வார்கள். பிறகு அங்கிருந்து இதயங்களின் இணைவு தொடங்கும்,தொடங்க வேண்டும் (கலாம் இப்படிக் கூறியபோது கூடியிருந்த அத்தனை பேரும் நீண்ட நேரம் கைதட்டிகலாமைப் பாராட்டினர்).

ஒரு முறை டாக்டர் செரியன், மூளை செயல்படாத (பிரெய்ன் டெட்) இந்துப் பெண்ணின் இதயத்தை, முஸ்லீம்பெண் ஒருவருக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தினார். பின்னர் அந்த முஸ்லீம் பெண் நல்ல நலமுடன்இருந்தார்.

தாயின் இருதயம் பொருத்தப்பட்ட முஸ்லீம் பெண்ணை, அந்த இந்துப் பெண்ணின் மகள் தனது இரண்டாவதுதாயாகவே கருதி பாசமுடன் இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முஸ்லீம் பெண்மணி இறந்தபோது,அவரை தாயாகக் கருதி பாசம் செலுத்தி வந்த அந்த சின்னப் பெண் பல மணி நேரம் அழுது கொண்டே இருந்தார்என்று எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நானும் கலங்கினேன்.

இந்த மருத்துவமனையில் அனைத்து டாக்டர்களும் இருதயங்களை பிளந்து அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள்.ஆனால் நமது இப்போதையே தேவை ஒன்றே ஒன்றுதான், இருதயங்கள் அனைத்தையும் இணைப்பதுதான்.இதுதான் இந்தியாவின் தேவையும் கூட.

ஊரகப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் குறைந்த செலவில் சிகிச்சை செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+