என்னை அங்கீகரித்தவர் சிவாஜி: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எனக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைக்க முக்கியக் காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். அவர்தான்என்னை அரசியல்வாதியாக முதல் முறையாக அங்கீகரித்தவர் என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருமையாகக் கூறினார்.

சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி சென்னை வடபழனியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின்ஆதரவளர்கள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்ச்சியில் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

தனது பேச்சின்போது சிவாஜியை வெகுவாக புகழ்ந்து தள்ளினார் இளங்கோவன். காங்கிரஸ் கட்சி கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை. இருப்பினும் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்காமராஜரும், சிவாஜி கணேசனும்தான்.

சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்காக தன்னையும், தனது ரசிகர்களையும் வருத்திக் கொண்டவர். காமராஜரின்கொள்கைகளும், பெயரும்தான் இன்றும் காங்கிரஸைக் கட்டிக் காத்து கொண்டுள்ளது.

எனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தவர் சிவாஜி கணேசன்தான். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.அவரது ஆசைப்படி, அவரது லட்சியமான காமராஜர் ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அதற்காக நான் இறுதிவரை பாடுபடுவேன். அதுதான் சிவாஜிக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.

காமராஜர் ஆட்சி எப்போது வரும், யாரால் வரும், எப்படி வரும், என்று வரும் என்பதை உறுதியிட்டுக் கூறமுடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் நிச்சயம் வரும் என்றார் இளங்கோவன்.

சிவாஜி கணேசன் முன்பு தொடங்கி நடத்திய தமிழக முன்னேற்றக் கழகத்தில் சிறிது காலம் இருந்தவர்இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர சிவாஜி கணேசனின் ரசிகர், அத்தோடு மட்டுமல்லாது சிவாஜிகுடும்பத்தின் மிக நெருங்கிய நண்பரும் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+