பாண்டிச்சேரியில் கலாம்; சட்டசபையில் இன்று உரை
பாண்டிச்சேரி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று புதுவை வந்து சேர்ந்தார். அங்கு சட்டசபைக் கூட்டத்தில்அவர் சிறப்புரையாற்றுகிறார்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம், பிரான்ஸ் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்றுடன் 50 ஆண்டுகள்முடிகிறது. இதையொட்டி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்திற்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அப்துல்கலாம் உரை நிகழ்த்துகிறார்.
இதற்காக இன்று காலை அவர் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக ஆளுநர்ராம்மோகன் ராவ், அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்ஆகியோர் கலாமை வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கலாம் புதுவை சென்றார். புதுவை விமான நிலையத்தில் அப்துல்கலாமை, புதுவை துணை நிலை ஆளுநர் லகேரா, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் ஆகியோர் கலாமைவரவேற்றனர்.
பின்னர் அவர் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்குஅவர் பேசுகையில்,
தற்போது இந்தியாவால் எந்தவிதமான செயற்கைக்கோளையும், அவற்றை ஏவும் ராக்கெட்களையும் தயாரிக்கமுடியும். அதற்கான தொழில்நுட்பத்தையும், மனித வளத்தையும் இந்தியா பெற்றுள்ளது.
நமது வளர்ச்சிக்கு முக்கிய தடையாக ஊழல் இருக்கிறது. அதற்கு எதிராக சட்டம் இருந்தாலும், அதனால் முழு பலன்கிடைக்கவில்லை. இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று கூறினார்.
அதன் பின்னர் மணிக்கு புதுவை சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் கலாம் உரை நிகழ்த்தவுள்ளார்.
கலாம் புதுவை வந்துள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications