வீரப்பன் ஆதரவாளர்கள் மிரட்டல்; சேலத்தில் பதற்றம்
ஈரோடு:
வீரப்பன் சாவுக்குப் பழிவாங்கும் விதமாக கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரல் ரயில் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் எனஈரோடு, சேலம் ரயில் நிலையங்களுக்கு தொலைபேசி மிரட்டல் வந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஈரோடு ரயில் நிலைய மாஸ்டருக்கும், சேலம் ரயில் நிலைய மாஸ்டருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்தான் மேட்டூரிலிருந்து பேசுவதாகவும், தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
பின்னர், வீரப்பனை அநயாயமாக கொன்ற தமிழக காவல்துறைக்குப் பாடம் புகட்டும் வகையில், ஈரோடு டீசல் ரயில்பெட்டிபணிமனை மற்றும் கன்னியாகுமரி-மும்பை, ஈரோடு-கன்னியாகுமரி ரயில்களை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகதெரிவித்து விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து இரு ரயில் நிலையங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. அந்த சமயத்தில்கன்னியாகுமரியிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலை நிறுத்திஒவ்வொரு பெட்டியாக போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். என்ஜினிலும் சோதனை நடத்தப்பட்டது.
இறுதியில் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தவுடன் ரயில் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இதேபால,ஈரோடு ரயில் நிலையத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவலால் ஈரோடு,சேலம் ரயில் நிலையங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications