அதிரடிப்படை வீரரின் ஈவ் டீசிங் !
கரூர்:
வீரப்பனைப் பிடித்த சிறப்பு அதிரடிப் படையில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ. 3 லட்சம் பரிசு, வீட்டு மனை, பதவிஉயர்வு, பதக்கம் வாங்கிய அதிரடிப்படை வீரர்களில் ஒருவர், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்து பொது மக்களிடம் செருப்படிவாங்கினார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர் காவலர் கண்ணன்.திருச்சியைச் சேர்ந்தவர். தற்போது இவருக்கு தலைமைக் காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சொந்த ஊரான திருச்சி வந்த இவர், பஸ்ஸில் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
பஸ் கரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதை அந்தப்பெண் தட்டிக் கேட்டபோது, நான் அதிரடிப்படை வீரன், என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்று வாய்ச்சவடால்பேசினார்.
மேலும் தொடர்ந்து அப் பெண்ணிடம் திமிராக சில்மிஷத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட்டு பஸ்சைநிறுத்தினார். கோபமடைந்த பயணிகள் ஆத்திரத்துடன் அதிரடிப்படை வீரர் கண்ணன் மீது பாய்ந்தனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கண்ணன், பஸ் நின்றதும் கீழே இறங்கி ஓடியுள்ளார். ஆனால், பயணிகள் அவரை விரட்டிச்சென்று பிடித்தனர். பயணிகளும், சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களும் சேர்ந்து கண்ணனை அடித்து துவம்சம்செய்தனர்.
வீரப்பனை தேடுதறா சொல்லி மலைப் பகுதி பெண்களிடம் இதே வேலையைத் தான் அதிரடிப்படையினரில் சிலர் செய்தார்கள்என்று ஒரு சிலர் சூட்டைக் கிளப்பிவிட, அடி-உதை அதிகமானது. சில பெண்கள் அவருக்கு செருப்படியும் தந்தனர்.
தர்ம அடியில் நிலை குலைந்த கண்ணனை கரூர் போலீஸாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர்.
சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவின்போது பேசிய அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், அதிரடிப்படை வீரர்கள் யாரும்எந்தவித தவறான செயலிலும் ஈடுபடக் கூடாது. அதிரடிப் படையின் மாண்பை கெடுத்து விடக் கூடாது என்று அறிவுரைகூறியிருந்தார்.
அவர் சொன்ன வாய் முகூர்த்தமோ என்னவோ, அதிரடிப்படை வீரர் ஒருவர் பெண் விவகாரத்தில் பொது மக்களிடம் நாறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications