டாக்டர்கள், போலீசார் கூட்டாக ரூ. 21 கோடி மோசடி
மதுரை:
போலிச் சான்றிதழ்கள் மூலம் ரூ.21 கோடிக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மோசடி நடந்துள்ளது.
இதில் மதுரையைச் சேர்ந்த 15 டாக்டர்கள், 5 வழக்கறிஞர்கள் உட்பட 30 அரசு அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதுதெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக, வாகன ஓட்டிகள் பெயரில் போலி சான்றிதழ்களைத் தயார் செய்து இன்ஸ்சூரன்ஸ்நிறுவனங்களை இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியதில் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 15 அரசு டாக்டர்கள், 5வழக்கறிஞர்கள், உதவி போலீஸ் கமிஷ்னர், 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 ஆடிட்டர்கள் ஆகிய 30 பேர் இதில்சம்பந்தப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சமர்பித்த போலிச் சான்றிதழ்களில் உள்ள முகவரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று விசாரித்த போது, குறிப்பிட்டபெயரில் ஓட்டுனர்கள் யாரும் விபத்திலேயே சிக்கவில்லை என்று தெரியவந்தது.
1997 முதல் 2002-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரூ. 21 கோடி அளவிற்கு இவர்கள் கூட்டாக மோசடிசெய்துள்ளனர்.
இந்த 30 அதிகாரிகள் மீதும் மதுரை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 7 பிரிவுகளில்வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
விபத்தில் சிக்காத, அதேநேரத்தில் இன்சூர் செய்து கொண்ட நபரின் பெயரில் முதலில் போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்வர்.இதற்கு அரசு மருத்துவமனை டாக்டர் போலி சான்றிதழ் தருவார். இதையும் வழக்கறிஞரின் சான்றிதழையும் வைத்துக் கொண்டுஓட்டுனரின் பெயரில் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஏமாற்றி இவர்கள் பணம் பார்த்து வந்துள்ளனர்.
மதுரை, தேனியைப் போலவே பிற மாவட்டங்களிலும் இதே போன்ற மோசடிகள் நடந்திருக்கக் கூடும் என்று கருதும் லஞ்சஒழிப்புத்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications