சென்னையில் காலரா பரவுகிறது
சென்னை:
சென்னை நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மிக வேகமாக காலரா நோய் பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர்காலராவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
நகரில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது, இதனால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக வீராணம்திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரும் மிகக் கலங்கலாகவும், அசுத்தமாகவும் வந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக திருவல்லிக்கேணி, பட்டாளம், செங்குன்றம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பாடி, ராயபுரம் உள்ளிட்ட பலபகுதிகளில் காலாரா பரவி வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தண்டையார்பேட்டையில் உள்ள அரசு தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சிலதினங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுவரை 100க்கும் மேற்பட்டோர் காலாரா பாதிப்புக்கு ஆளாகி இங்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மட்டும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 50 பேர் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நோயாளிகள் வந்தவண்ணம்உள்ளனர்.
இதனால் அப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டியது அவசியம்.
காலாராவில் இருந்து தப்ப அசுத்தமான தண்ணீர் குடிப்பதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டிகுடித்தால் இந்த நோய்த் தாக்குதலில் இருந்து தப்பலாம்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications