இந்து முன்னணி தொண்டர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த இந்து முன்னணி தொண்டர் ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார்.
அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற அந்தத் தொண்டர், சங்கராச்சாரியாரின் கைதை எதிர்த்து பல்லடம் அருகே இந்துஅமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு வந்தார். போராட்டத்தில் பங்கேற்ற அவர், சங்கராச்சாரியார் வாழ்க, பொய் வழக்குபோடாதே என்று ஆவேசமாக கோஷமிட்டபடி சரிந்து விழுந்தார்.
அவரை உடனே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதனைசெய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் பங்கேற்க வரும்போதே அவர் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications