சென்னை அனுராதாவிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பி ரகுவால் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் அனுராதாவிடம்காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் தொடர்புடைய பல்வேறு புகார்களை காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
சங்கர மடத்துக்கும், பெண்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அந்த வகையில், அனுராதா என்றபெண்ணுக்கு சங்கர மடத்திலிருந்து பார்க்கப்பட்ட நபரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக ஒரு தகவல் வெளியானது.
சங்கர மடத்தில் வேலை பார்த்து வரும் ராமு குருக்கள் என்பவரின் மகள்தான் இந்த அனுராதா. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தசதீஷ் என்பவரைக் காதலித்து வந்தார். அவருடன் வீட்டை விட்டும் வெளியேறிவிட்டார்.
இதுகுறித்து விஜயேந்திரரிடம் ராமு குருக்கள் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து விஜயேந்திரர் உத்தரவுப்படி அனுராதாவைத் தேடும்பணி நடந்தது. அவர் திருச்சியில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டு காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டார்.
அதன் பின்னர் விஜயேந்திரரின் தம்பி ரகுவின் ஏற்பாட்டின் பேரில் சென்னையைச் சேர்ந்த ராஜாராமன் என்பவருடன் அவருக்குத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை அசோக் நகரில் தற்போது கணவர் ராஜாராமன், மாமனார், மாமியாருடன் வசித்து வரும்அனுராதாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
அனுராதாவின் திருமணத்தை முன்னின்று நடத்தியது விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பி ரகு என்று கூறப்படுகிறது. அனுராதாவுக்குதிருமணம் செய்து வைப்பதில் இருவரும் காட்டிய ஆர்வம் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது அனுராதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் விசாரணையின்போது யார் மீதும் குறைசொல்ல விரும்பவில்லை, நடந்தது குறித்துப் பேச விரும்பவில்லை என்று அனுராதா திட்டவட்டமாக கூறி விட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications