ஜெயலட்சுமி: ஒரு வழக்கை முடித்தது சிபிஐ
மதுரை:
ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடித்து விட்டதாகத் தெரிகிறது. விரைவில்இதுதொடர்பான இறுதி அறிக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
போலீஸார் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியது தொடர்பான ஜெயலட்சுமியின் புகாரையும், அவரது குடும்பத்தினரை கடத்தியதாகஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமி கொடுத்துள்ள புகாரையும் சிபிஐ விசாரித்து வருகிறது.
இதில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடித்து விட்டதாகதெரிகிறது. விரைவில் இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல்செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
கடத்தல் வழக்கில் இதுவரை மொத்தம் 45 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள்திரட்டப்பட்டுள்ளன. விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது முக்கிய திருப்பமாக தனக்கும், ஜெயலட்சுமிக்கும் கடந்த 8 ஆண்டுகளாக எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றுஅழகிசாமி தெரிவித்திருந்த தகவல் பொய்யானது என்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
தற்போது வரை ஜெயலட்சுமியுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையின்போது தெரிந்துகொண்டுள்ளனர்.
இதற்கிடையே, ஜெயலட்சுமி கொடுத்த புகாரில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் விரைவில் சிபிஐ தனதுவிசாரணையைத் தொடங்கும் எனத் தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர்களில் பெரும்பாலானவர்களை அரசு டிஸ்மிஸ் செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications