தளவாய் மீதான புகார்: அரசுக்கு நீதிமன்ற நோட்டீஸ்
சென்னை:
பெண் டாக்டரிடம் பாலியல் கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில் தமிழக அரசும், காவல்துறையும் இதுவரைஎடுத்த நடவடிக்கைகள் குறித்து வருகிற 27ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கும், சென்னை மாநகரகாவல்துறை ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் கோமதி. இவர் சமீபத்தில் சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜிடம் கொடுத்த புகாரில், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தன்னிடம் தவறான முறையில் நடக்கமுயற்சித்ததாகவும், தகாத உறவுக்கு அழைத்ததாகவும் கூறியிருந்தார்.
அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் அடித்து துன்புறுத்தியதாகவும், இடமாற்றம் செய்து உத்தரவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்தப்புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு கோரி கோமதி வழக்குப் பதிவு செய்தார்.
இந்த மனு மீது இன்று நீதிபதி முருகேசன் விசாரணை நடத்தினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோமதி மனநலம்பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்.
விசாரணையின் இறுதியில் வருகிற 27ம் தேதிக்குள், வன்கொடுமை சட்டத்தின் கீழ் கோமதி பதிவு செய்த புகாரின் மீது இதுவரைஎடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications