கொலை: ஜெயேந்திரருக்கு தொடர்பில்லை
டெல்லி:
ஜெயேந்திரரின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து இந்த மேல்முறையீட்டு மனுவை வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், நீதிபதி ஏ.கே.மாத்தூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்பரிசீலனைக்கு எடுத்தது. அப்போது ஜெயேந்திரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ். நரிமன் ஆஜரானார்.
தனது மனுவில் சங்கராச்சாரியார் கூறியிருப்பதாவது:
கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மகா பெரியவர் பரமாச்சாரியாருடன் இருந்தவர். 1994ம் ஆண்டில் அவர் மரணமடையும் வரைஅவருடன் இருந்தார் சங்கரராமன்.
பரமாச்சாரியாரின் மிகப் பாரம்பரியமான, பழமையான மத நடவடிக்கைகளைப் பார்த்துப் பழகிய சங்கரராமனுக்கு ஜெயேந்திரரின்நடவடிக்கைகள் ஒத்துப் போகவில்லை. ஜெயேந்திரரும் வேத பண்டிதர் தான் என்றாலும் மடத்தின் செயல்பாட்டை கல்வி, மருத்துவஉதவிகள், மக்களுக்கு அடிப்படை உதவிகள் வழங்குவது ஆகிய பொதுக் காரியங்கள் பக்கமாகத் திருப்பினார்.
வேதம் சொல்லித் தருதல், இந்து மத பிரச்சாரம் என்றிருந்த மடத்தின் செயல்பாடுகள் சமூக சேவைப் பக்கமாகச் சென்றதை சங்கரராமனால்பொறுக்க முடியவில்லை. மடத்தை அதன் பாரம்பரியத்தில் இருந்தே ஜெயேந்திரர் திசை திருப்பிச் செல்வதாக நினைக்க ஆரம்பித்தார்சங்கரராமன்.
இதனால் பரமாச்சாரியாரின் மறைவுக்குப் பின் மடத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்ட சங்கரராமன் வரதராஜ பெருமாள்கோவில் மேலாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.
ஆனால், ஜெயேந்திரருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். சங்கராச்சாரியாரின் மத நல்லிணக்க முயற்சிகளையும் கூடவிமர்சித்து இந்து அறநிலையத்துறை மற்றும் பொது மக்களுக்கு கடிதங்கள் அனுப்ப ஆரம்பித்தார். ஜெயேந்திரரை பல வகைகளிலும் குறைகூறி விமர்சன பிரச்சாரம் செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் மடத்தின் சார்பில் நடத்தப்படும் அறக்கட்டளை ஜெயேந்திரர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் கூட குற்றம் சாட்டஆரம்பித்தார்.
தனது சொந்த பெயரிலும் சங்கரசேகர கனபாடிகள் என்ற புனைப் பெயரிலும் சங்கரராமன் எழுதிய அந்தக் கடிதங்களை ஜெயேந்திரரின்பார்வைக்கே மடத்து நிர்வாகிகள் கொண்டு செல்லவில்லை. சங்கரராமன் அடிக்கடி இப்படி ஆதாரமில்லாத புகார்களைச் சொல்லி கடிதம்அனுப்புவது வழக்கமாகிவிட்டதால் அதை ஜெயேந்திரரிடம் மடத்து நிர்வாகிகள் கூறவும் இல்லை.
நிலைமை இப்படி இருக்க இந்தக் கொலையில் சங்கராச்சாரியாருக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாகவும் அதற்கு அசைக்க முடியாதசாட்சிகள் இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கடந்த மாதம் 17ம் தேதி அறிவித்தார்.
போலீசார் கூறும் செல்போன் ஜெயேந்திரருக்கு சொந்தமானதே அல்ல. இதனால் கொலையாளிகளுடன் சங்கராச்சாரியார் அந்தசெல்போனில் பேசினார் என்று சொல்வதற்கு அடிப்படையே இல்லை.
ஐசிஐசிஐ ஏடிம்மில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்து கொலையாளிகளுக்குத் தந்ததாக போலீசார் கூறியுள்ளனர். மடத்துக்குகாஞ்சிபுரம் ஐசிஐசிஐ வங்கியில் கணக்கே இல்லை என்பது தான் உண்மை.
இதனால் போலீசார் சொல்வது போல இந்தக் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே அவரை உடனேஜாமீன்வில் விட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சங்கராச்சாரியாரே நேரடியாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதால், இதே கோரிக்கையை வலியுறித்தி தாக்கலான பிற மனுக்கள்ஒதுக்கப்பட்டுவிடும் என்று கூறிய நீதிபதிகள், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடக்கும் என்று அறிவித்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications