• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெயலலிதாவின் காட்டு தர்பார்: எச்.ராஜா தாக்கு

By Staff
|

விழுப்புரம் & திருப்பூர்:

Jayendrar ஜெயேந்திரரைக் கைது செய்ததன் மூலம் மடத்தின் மீது காட்டு தர்பார் ஆட்சியை தமிழக அரசு கட்டவிழ்த்துள்ளது என்று பாஜக மாநிலபொதுச் செயலாளர் எச்.ராஜா கூறினார்.

விழுப்புரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தேசிய ஜனநயாகக் கூட்டணி எம்.பிக்கள் குழு காஞ்சிபுரம் சென்றபோது நானும் சென்றிருந்தேன். அப்போது மடத்தின் ஊழியர்கள் மற்றும்பக்தர்கள் போலீஸாரால் துன்புறத்தப்பட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.

தலைகீழாய் கட்டி தொங்கவிட்டு...

ஜெயேந்திர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பே மடத்தின் ஊழியர் ஒருவரை காவல் நிலையத்தில் தலைகீழாக கட்டி வைத்துதுன்புறுத்தி உள்ளனர். அவரிடம் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு சம்பந்தம் உள்ளது என்று எழுதி தரக் கூறி துன்புறுத்தியுள்ளனர்.

மகளிரி விடுதிக்குச் சென்று இதய நோயால் இறந்த குழந்தை யுவஸ்ரீ பாலியல் பலாத்காரத்தால் இறந்தார் என்று எழுதி தருமாறுமிரட்டியுள்ளனர். சங்கரராமன் கொலை வழக்கில் ஆதாரங்கள் கிடைக்காததால் வேறு ஏதாவது ஒரு வழக்கிலாவது ஜெயேந்திரரை சிக்கவைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.

மடத்தின் சொத்து மீது கண்..

இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு மடத்தின் சொத்து மீது கண் உண்டு. இதற்கு பெரிய விலையை ஜெயலலிதா கொடுக்கவேண்டியிருக்கும். அதனை மக்கள் கொடுப்பார்கள். ஜெயேந்திரரை கைது செய்ததன் மூலம் மடத்தின் மீது காட்டு தர்பாரை தமிழக அரசுகட்டவிழ்த்துள்ளது.

ஜெயேந்திரர் கைது உள்நோக்கம் என்று குரல் எழுப்பிய கருணாநிதி இப்போது மழுப்புகிறார். எஸ்.பி., பிரேம்குமார் மீது 2 கிரிமினல்வழக்குகள் உள்ளது. அவர் எப்படி விசாரணை அதிகாரியாக செயல்பட முடியும்? இதுகுறித்து ஆளுநர், குடியரசுத் தலைவருக்குத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் இரண்டு பேர் சிக்குவது உறுதியாகி விட்டது.

முஸ்லீம்கள் எண்ணிக்கை கூடுது..

மரியாதைக்குரியவர்கள் என உலகில் யாரும் இல்லை என்று நடக்கும் ஜெயலலிதாவின் போக்கு கண்டனத்திற்குரியது. காஞ்சிபுரத்தில்கடந்த 2 மாதங்களாக நடந்துள்ள காவல் துறையின் மனித உரிமை மீறல்கள் மனவேதனை அளிக்கிறது. இதுபோன்ற அதிமுகவின்நடவடிக்கைகள் உடைத்தெறிக்கப்படும்.

விழுப்புரத்தில் நாளை (இன்று) நடக்கும் இந்து சமுதாய பாதுகாப்பு பேரவை மாநாட்டை பொது இடங்களில் நடத்த நகராட்சி அனுமதிமறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

முஸ்லிம்களின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இந்துக்களின் வளர்ச்சியைவிட 2 மடங்கு உயர்ந்து வருகிறது.

மத மாற்ற தடைச் சட்டம், எல்லை ஊடுருவலை தடுத்தல், பொது சிவில் சட்டம் , குடும்ப கட்டுப்பாட்டு கட்டாயம் போன்ற சட்டங்களைமீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

கருணாநிதியின் மாறும் மனம்:

இதற்கிடையே திருப்பூரில் நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,

வருகிற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்பதை கட்சியின் அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும். அதற்கு தமிழகபாஜக கட்டுப்படும்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் பங்கு குறித்தோ, அவரது தொடர்பு குறித்தோ இதுவரை எந்த தகவலும் போலீஸாரால் தரமுடியவில்லை.

ஜெயேந்திரர் மீதான வழக்கில் நீதிமன்றம் உரிய கடமையைச் செய்ய வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போல பாஜகவும்எதிர்பார்க்கிறது. ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதால், துறவறம் என்பதே அருவெறுக்கத்தக்க ஒன்று என்பதுபோல் இடதுசாரிகள்சித்தரிக்க முயல்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் எதிரணியில் இருக்கின்றன. மங்கைக்கு சூதகம் என்றால் கங்கையில் நீராடலாம்.கங்கைக்கே சூதகம் என்றால் எங்கே போவது என்று கேட்ட கருணாநிதி கூட ஜெயேந்திரர் கைதில் தனது மனமாற்றத்தை தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் மனம் மாறும் அவர் கடைசி வரை இதே மனநிலையில் இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X