கொலையான வங்கி ஊழியரின் காதலரும் மர்மச் சாவு
சென்னை:
| சென்னை சென்ட்ரல் ரெயில்வே அலுவலகத்தில் உள்ள அர்பன் வங்கியில் கிளார்க் வேலை பார்த்து வந்தவர் அனிதா. பிரசவத்துக்கு தாய்வீட்டுக்கு வந்த அனிதா குழந்தை பிறந்த பிறகு கணவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவருக்கும் அஸ்வின் என்ற வாலிபருக்கும் கள்ளக் காதல்இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் கடந்த 14ம் தேதி தாய் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்ட அனிதா கடத்திக் கொலை செய்யப்பட்டார். பிரேதபரிசோதனையில் அனிதா 50 நாள் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. |
இந் நிலையில் சென்னை தரமணியில் மழை நீர் வடிகால் கால்வாயில் அஸ்வின் பிணமாகக் கிடந்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிந்த அஸ்வினின் உடலை அவரது தநதை முத்துசாமி, அக்காள் கணவர்முத்துமணி ஆகியோர் அடையாளம் காட்டினர்.
அஸ்வினின் தலையில் லேசான காயமும் இருந்தது. அனிதா கடத்திச் செல்லப்பட்ட 14ம் தேதி மாலையிலேயே அஸ்வின் தரமணியில்பிணமாக கிடந்துள்ளாகத் தெரிகிறது.
இதனால் அனிதாவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அனிதாவைக் கொன்ற கும்பல் இவரையும்கொலை செய்து கால்வாயில் வீசியதா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. அப்போது இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிந்துவிடும்.அதோடு அனிதாவின் வயற்றில் இருந்த கருவோடு அஸ்வினின் மரபணு சோதனை நடத்தப்படுகிறது.
அஸ்வின் தந்தை பேட்டி:
இதற்கிடையே அஸ்வினின் தந்தை முத்துசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அஸ்வின் சென்னை வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. எப்போதாவது தான் ஊருக்கு வருவான். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்து,ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர ரூ.3 லட்சம் வேண்டும் என்று கேட்டான். நான் ரூ.1 லட்சம் கொடுத்து அனுப்பினேன். இந் நிலையில்தான்போலீஸார் வந்து அவனைப் பற்றி விசாரித்தனர்.
எனது மகன் நல்லவன் என்பதால் போலீஸார் கூறியதை நான் நம்பவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது. அதை போலீஸார்தான்கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
அழகிகளுடன் தொடர்பு:
இதற்கிடையே கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அஸ்வினுக்கு வடபழனியில் சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் மூலமாக பெண்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் அனிதாவின் பழக்கமும் அஸ்வினுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
பெண் கொலை வழக்கில் தேடப்பட்டவரே மர்மமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்













Click it and Unblock the Notifications