இந்தி மைல் கற்கள் அகற்றப்படுகின்றன: டி.ஆர்.பாலு
சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்ட இந்தியிலான மைல் கற்கள் அகற்றப்பட்டு அதற்குப் பதில் தமிழில் எழுதப்பட்ட மைல்கற்கள் வைக்கப்பட்டு வருவதாக மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழில் மைல் கற்களை வைப்பதற்குப் பதில் இந்தியில்மைல் கற்கள் வைக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் திமுக தலைவர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் தீவிரமாகஇறங்கியுள்ளதாகவும் அவர் சாடியிருந்தார்.
இந்தி மைல் கற்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர்கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்து டி.ஆர்.பாலு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தப் பிரச்சினை கடந்த நவம்பர் மாதமே எனது கவனத்திற்கு வந்தது. உடனடியாக இந்தியில் எழுதப்பட்ட மைல்கற்களை அகற்றி விட்டு தமிழ் மைல் கற்களை வைக்கும்படி நான் ஆணையிட்டுள்ளேன்.
தற்போது, செங்கல்பட்டு-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் இந்திமைல்கற்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மொத்தம் 45 இந்தி மைல் கற்களில் 16 கற்கள் மாற்றப்பட்டு விட்டன. எஞ்சியகற்களையும் விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியை திணிக்கும் எந்த முயற்சியையும் திமுக ஏற்றுக் கொள்ளாது. அதை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாக ஜெயலலிதா கூறுவதில் சற்றும் உண்மையில்லை.
1986ம் ஆண்டில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 9திமுக எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறித்தது அப்போது இருந்த அதிமுக ஆட்சிதான் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications