ஆண்டி தேவர் மகன் வழக்கு சிபிஐக்கு மாற்றம்
சென்னை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் ஆண்டித் தேவரின் இரண்டாவது மனைவியின் மகன் கொலை செய்யப்பட்டவழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டித் தேவரின் இரண்டாவது மனைவியான இந்திராணியின் மகன் சிவராமன். பி.இ. பட்டதாரியான இவர் 1998ம் ஆண்டு ஆகஸ்ட்திடீரென மாயமானார். இது தொடர்பாக மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் இந்திராணி. ஆனால், வழக்கைப் பதிவுசெய்துவிட்டு போலீஸ் தூங்கப் போய்விட்டது. இதில் எந்த விசாரணையும் நடக்கவில்லை.
இதையடுத்து இந்திராணியின் தம்பியும் சிவராமனின் தாய்மாமாவுமான ராஜேந்திர நரசிம்மன் மீண்டும் போலீசிடம் ஒரு புகார் தந்தார்.அதில் சிவராமன் காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை ஆண்டித் தேவர் மீதே சந்தேகம் ஏற்படுவதாகக் கூறியிருந்தார்.
ஆனால் போலீஸ் தரப்பில் இதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தைஅணுகினார் தொடர்ந்தார் ராஜேந்திர நரசிம்மன்.
அங்கு அவர் தொடர்ந்த வழக்கில் முதல் மனைவியின் பேச்சைக் கேட்டு சிவராமனை ஆண்டித் தேவரே கொலை செய்திருக்கலாம் என்றுசந்தேகப்படுவதாகவும், இது குறித்து போலீசார் சரியாக விசாரிக்காததால், இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுமாறும்கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவராமன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
சிபிசிஐடி விசாரணை தொடங்கியதும் ஆண்டித்தேவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு வழக்குகிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜேந்திர நரசிம்மன் மறுபடியும் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
சிபிசிஐடி இந்த வழக்கை முறையாக விசாரிக்காததால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், வழக்கை சரியான முறையில் சிபிசிஐடி விசாரணை செய்யாதது வருத்தம் தருகிறது. இதுகண்டனத்துக்குரியதாகும். சிவராமனை தனது முதல் மனைவியின் உறவினர்களோடு சேர்ந்து ஆண்டித் தேவரே கொன்றிருக்கக் கூடும் என்றபுகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறேன் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications