ஆட்சியில் பங்கு கேட்கும் காங்!
திருச்சி : தமிழகத்தில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் காங்கிரசும் இடம்பெறும் என்று அக் கட்சியின் சட்டமன்ற தலைவர் பாலசுப்ரமணியம்தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்த அவர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது:
திருவரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டத்தை விட போலீஸ் கூட்டம் தான் அதிகம்இருந்தது. எல்லா இடத்தையும் போலீஸ் தான் ஆக்கிரமித்திருந்தது. யாரை விட வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு போலீசார் தான்எல்லா இடத்தையும் ஆக்கிரமித்தனர்.
தமிழக அரசின் நடவடிக்கைகளிலிருந்து வீராணம் திட்டம் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு வீணானதிட்டம். முறையாக ஆய்வு செய்யாமல் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை.
பா.ஜ.கவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. அதை திசை திருப்பத்தான் ஜெயேந்திரர் விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். அடுத்து தமிழகத்தில் அமையவிருக்கும் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும்,அதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றார். அதிமுக ஆட்சியே அடுத்து நடைபெற்றாலும் அதிலும் காங்கிரஸ் அங்கம் வகிக்குமாஎன்ற கேள்விக்கு எஸ்ஆர்பி பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications