கோவையில் விரைவில் சைபர் கிரைம் தடுப்பு பிரிவு
கோயம்புத்தூர்:
இன்டர்நெட், செல்போனில் ஆபாசத்தை தடுக்க கோவை காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவு விரைவில் ஏற்படுத்தப்படும் என்றுகோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுப்பிரமணியம் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கோவையில் இந்த ஆண்டு 18 கற்பழிப்பு குற்றங்களும், 26 கடத்தல் குற்றங்களும், 59 வரதட்சணை குற்றங்கள் பதிவாயின. இதில் 49வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 3 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 2,555 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2,541 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. எஸ்.பியிடம் 1,703 புகார் மனுக்கள் கொடுக்க பட்டு, அவற்றில் 1,229 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டன.
இன்டர்நெட் மற்றும் செல்போனில் பெண்களுக்கு ஆபாச செய்தி அனுப்புவது ஆகிய செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க விரைவில் சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்படும். இன்டர்நெட் பிரெளசிங் சென்டர்களில் ஆபாச படம் பார்ப்பதைத் தடுக்கமுதல்கட்டமாக சென்டர் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளேன். இதையும் தாண்டி தவறு நடந்தால் நடவடிக்கைபாயும்.
கோவையில் ரூ.1 கோடி செலவில் நவீன வசதியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. மாநகர கமிஷனர் அலுவலகவளாகத்தில் இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
ஆண்,- பெண் போலீஸார் உடல் பருமனை குறைக்க கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முகாமில் சிறப்பு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.
சாதாரண தொலைபேசியில் அவசர போலீஸ் எண் 100-க்கு அழைப்பதற்கு கட்டணம் கிடையாது. அது போலவே செல்போனிலும் அவசரபோலீசுக்கு இலவசமாக தகவல் தெரிவிக்க, சில செல்போன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டு வருகிறது என்றார்சுப்பிரமணியம்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications