4 விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம்
சென்னை:
விடுதலைப் போராட்ட வீரர்கள் 4 பேருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
போடி நாயக்கனூர், குயவர்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடம் பெரிய கருப்பதேவர், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மோத்தக்கல்,கீழ்பாச்சார் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி,
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை, குளத்துல்வாய்ப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி, பெருமாள்பட்டியைச் சேர்ந்த தவமணி ஆகியவிடுதலைப் போராட்ட வீரர்கள் தங்களுக்கு மாநில அரசின் விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியத்தை வழங்க வேண்டுமெனஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்த மனுக்களைப் பரிசீலனை செய்த ஜெயலலிதா நால்வருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி,அவர்களுக்கு ஓய்வூதியதாக மாதம் 3,000 ரூபாயும், மருத்துவப்படியாக மாதம் 5 ரூபாயும், ஆக மொத்தம் 3,015 ரூபாய் வழங்கப்படும்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜா என்ற விடுதலைப் போராட்ட வீரரின் மனைவிமங்களத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1,500 ரூபாயும், மருத்துவப்படியாக மாதம் 15 ரூபாயும், ஆக மொத்தம், 1,515 ரூபாய்வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
தேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரின் மனைவி ஆகியோருக்குவரும் 23ம் தேதியும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரருக்கு வரும் 25ம் தேதியும் அம்மாவட்டதலைநகரங்களில் இந்த ஆணைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications