கமல் பெயரைச் சொல்லி ஒரு மலேசிய கடத்தல்!
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு மலேசியாவில் உள்ள கணவன், மனைவிக்கு இ-மெயில்அனுப்பி அவர்களை சென்னைக்கு வரவழைத்துக் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மலேசியாவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி வில்லியம்மா. இவர்களுக்கு நரசய்யா என்ற மகனும்,மகளும் உள்ளனர். சுப்பிரமணி லாரி டிரைவராக உள்ளார்.
இவரது இ-மெயில் முகவரிக்கு சமீபத்தில் ஒரு மெயில் வந்தது.
அதில், தீபாவளியையொட்டி நடந்த பரிசுப் போட்டியில் சுப்பிரமணியம் வெற்றி பெற்றுள்ளதாகவும்,சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 2 நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தவிழாவின்போது நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருமாறும் அந்த மெயில் தகவல் கூறியது. மேலும் சென்னைவிழாவுக்கு வந்து செல்வதற்காக சுப்பிரமணி மற்றும் வில்லியம்மாவுக்கு விமான டிக்கெட்டும் தபால் மூலம்அனுப்பப்பட்டன.
இதையடுத்து கமல்ஹாசனை சந்திக்கப் போகும் ஆர்வத்தில் மனைவியுடன் சென்னை வந்துள்ளார் சுப்பிரமணி.விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களை அழைத்துச் செல்ல 2 கார்கள் வந்தன.
ஒரு காரில் வில்லியம்மாவையும், மற்றொரு காரில் சுப்பிரமணியையும் ஏறச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.
வில்லியம்மாவை அழைத்துச் சென்ற கார் நேராக புதுவைக்கு சென்றுள்ளது. அங்குள்ள ஒரு ஹோட்டலில் அவரைஅடைத்து வைத்துள்ளனர். சுப்பிரமணி எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றே தெரியவில்லை.
இந் நிலையில் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து இன்று தப்பி வந்த வில்லியம்மா சென்னை விமான காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில் மலேசியாவைச் சேர்ந்த கருணா ராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து போலீஸார் வில்லியம்மாவிடம் விசாரணை நடத்தினர்.
அதில், வில்லியம்மாவின் மகன் நரசய்யாவும், கருணா ராஜின் மகள் ரீனாவும் காதலித்து வந்தனர். கருணாராஜின்எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்தக் காதலை வில்லியம்மாவின் குடும்பம் ஏற்றுக்கொண்டது. ஆனால் கருணாராஜ் கடைசி வரை காதலை ஏற்கவில்லை, திருமணத்தையும் அங்கீகரிக்கவில்லை.
இதனால் கருணா ராஜ்தான் சென்னைக்கு சுப்பிரமணியையும், வில்லியம்மாவையும் வரவழைத்துக் கடத்திச்சென்றிருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கடத்தப்பட்ட சுப்பிரமணியைத் தேடி வருகின்றனர்.
சென்னையில் இந்தக் கடத்தலை கருணாராஜே முன்னின்று நடத்தியதாகத் தெரிகிறது. இதனால் அவரையும்போலீஸார் தேடி வருகின்றனர். அவரது கட்டுப்பாட்டில் தான் இப்போது சுப்பிரமணி இருக்க வேண்டும் என்றுதெரிகிறது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications