இலங்கை அரசின் புதிய திட்டம்: புலிகள் ஆய்வு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க புதிய சமரசத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.
நார்வே அமைதி தூதர் எரிக் சோல்ஹைம் கடந்த வாரம் 5 நாள் பயணமாக கொழும்பு வந்திருந்தார். அப்போது அரசிடமும், புலிகளுடனும்அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பேசினார்.
அப்போது அரசின் அமைதிக்குழு செயலாளர் ஜெயந்த தனபாலா எரிக்கிடம் இலங்கை அரசின் புதிய திட்டத்தை முன்வைத்தார்.
இதை லண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்திடம் எரிக் சோல்ஹைம் ஒப்படைத்தார்.
இலங்கை அரசின் புதிய யோசனைகள் என்ன என்பது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட பாலசிங்கம், அத்திட்டத்தை புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர்கள் அது குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை அரசின் புதிய திட்டம் குறித்து புலிகள் எப்போது பதில் அளிப்பார்கள் என்ற கேள்விக்கும் பாலசிங்கம் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications