ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு
ஸ்ரீரங்கம்
| பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல்திறப்பு இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்தேறியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல்எனப்படும் பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை நடந்தது. சொர்க்க வாசல் திறப்பையொட்டி நேற்று இரவு முதலே பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் கூடியிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். இதையடுத்து கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தாஎன்று கோஷம் எழுப்பியபடி வழிபட்டனர். |
| சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீரங்கநாதர் குதிரை வாகனத்தில் தோன்றும் வேடுபறி விழா வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.ஸ்ரீரங்கநாதர் சந்தனு மண்டபத்தில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு திருமாமணி மண்டபம் வந்தடைகிறார். உபயக்காரர் மரியாதைக்குப் பிறகு இரவு 11.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 12.30க்கு மூலஸ்தானம் வந்தடைகிறார்.அதனையடுத்து 31ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் முதல் தேதியில் நம்மாழ்வார் மோட்சம், இயற்பாவுடன்வைகுண்ட ஏகாதசி விழா முடிகிறது. |
|
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு














Click it and Unblock the Notifications