"காணொலி திருடர்கள்!
சென்னை:
திருட்டு விசிடி விற்பனையாளர், தயாரிப்பாளர்களை "காணொலி திருடர்கள்" என்ற பெயரில் அழைக்க வேண்டும்என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் சுத்தத் தமிழைப் பயன்படுத்துவது வழக்கம். அதில் சில பதங்கள்வித்தியாசமானதாகவும், விநோதமாகவும் அமைந்து விடுவதுண்டு. அந்த வகையில் தற்போது திருட்டு விசிடிவிற்பனையாளர்களுக்கு தமிழக அரசுத் துறையினர் வைத்துள்ள பெயர் மிகவும் வித்தியாசமாக உள்ளது.
திருட்டு விசிடி விற்பனையாளர்களை காணொலி திருடர்கள் என்று அரசு அழைக்கிறது. முன்பு காணொலிகொள்ளையர்கள் என்று இவர்களை அரசு அழைத்து வந்தது. ஆனால் கொள்ளையர்கள் என்ற வார்த்தை குறித்துவாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இதுகுறித்து தமிழ் ஆட்சி மொழித் துறையிடம் அரசு கருத்து கேட்டது.
அதற்கு தமிழ் ஆட்சி மொழித் துறையினர், ஒருவரின் படைப்புகளைத்தான் திருட்டு விசிடி விற்போர்திருடுகின்றனர். எனவே அவர்களை கொள்ளையர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக திருடர்கள் என்றுஅழைக்கலாம் என்று அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருட்டு விசிடி விற்பவர்களை காணொலி திருடர்கள் என்ற பெயரில் அழைக்குமாறு மாவட்டஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசின் மது விலக்கு, ஆயத் தீர்வைத் துறை சார்பு செயலாளர் தேவசகாயம்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சரி காணொலி என்றால் என்ன? காண் + ஒலி என்பதன் சேர்க்கையே காணொலி ஆகும். ஒலியுடன் கூடிய காட்சி,அதாவது ஒளியும், ஒலியும் சேர்ந்த காட்சிகள் என்பதன் அர்த்தம்தான் காணொலி.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications