நிவாரணப் பணிக்குப் போக மறுத்த டாக்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்:

Bodies of childrend lying in Nagai hospital
கடல் கொந்தளிப்பால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணியில், சுனாமி அலைகள் மீண்டும் தாக்கக்கூடும் என்ற பயத்தால், மருத்துவ சேவை செய்ய டாக்டர்கள் போக மறுத்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமி அலைகள் தாக்குதலுக்கு 800க்கும் மேற்பட்டவர்கள்இறந்துள்ளனர். இங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாகையிலிருந்து ஒரு மருத்துவக் குழுவை வேளாங்கண்ணிக்குப் போகுமாறு மாவட்ட மருத்துவசேவைகளுக்கான இணை இயக்குனர் டாக்டர் வெங்கடாச்சலம் உத்தரவிட்டார்.

அந்த மருத்துவர்கள் பக்கத்து மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள். சுனாமி அலைகள் மீண்டும் தாக்கினால் என்னசெய்வது என்ற பயத்தில் இருந்த அந்த டாக்டர்கள், வேளாங்கண்ணிக்கு நாங்கள் போக மாட்டோம் என்றனர்.

இதனால் கோபமடைந்த இணை இயக்குனர் வெங்கடாச்சலம், அவர்களை மிகக் கடுமையாக எச்சரித்த பின்னரேபுறப்பட்டுச் சென்றனர்.

நாகை விரையும் பெங்களூர் டாக்டர்கள்:

இதற்கிடையே நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களுக்கு நான்கு மருத்துவர் குழுக்களை கர்நாடக அரசு அனுப்பிவைத்துள்ளது.

சுனாமி அலைகளுக்கு நாகப்பட்டனம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் தான் மிகப் பெரும் பாதிப்பையும்,சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளன.

இந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக கர்நாடக அரசு 4 மருத்துவர் குழுக்களைஅனுப்பியுள்ளது.

மொத்தம் 40 டாக்டர்கள், 40 நர்ஸ்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 20 பேர்இடம் பெற்றுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவர்கள் தங்களது பணியைத் தொடங்குவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+