நூற்றுக்கணக்கான லாரிகளில் விரையும் உணவு, மருந்துகள்
நாகப்பட்டனம்:
கடல் கொந்தளிப்பால் பெரும் பாதிப்புள்ளாகியுள்ள நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தொற்று நோய் பரவாமல்தடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிருந்தும் நோய் தடுப்பு மருந்துகள் லாரி லாரியாக அனுப்பப்படுகின்றன.
மேலும் உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்களும் லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகளில் இவை விரைகின்றன.
ஜெவுக்கு தலைமை நீதிபதி பாராட்டு:
இதற்கிடையே கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் சிக்கிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.பி.மாத்தூர் உள்ளிட்ட 500க்கும்மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டுக் கரை சேர்த்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ பாராட்டு தெரிவித்தார்.
சுனாமி கடல் கொந்தளிப்பின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.பி.மாத்தூரின் குடும்பத்தினரும், நூற்றுக்கணக்கானவர்களுடன் விவேகானந்தர்பாறையில் சிக்கிக் கொண்டனர். கடல் கொந்தளிப்பு காரணமாக படகு சர்வீஸ் ரத்து செய்யப்பட்டால் அவர்களால் கரைக்குத் திரும்பமுடியவில்லை.
![]() |
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறிய அவர் தனது பங்களிப்பாகமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,000 வழங்கினார்.













Click it and Unblock the Notifications