தெற்காசியாவில் உயிரிழந்தோர் 50,000 பேர்
சென்னை:
![]() |
இதில் மிக மோசமான பாதிப்பை அடைந்துள்ளது இந்தோனேஷியா. இங்கு 25,000 பேர் வரை பலியாகியுள்ளனர். அடுத்தபடியாகஇலங்கையில் சுமார் 12,000 மக்களும், தமிழகத்தில் 7,800 பேரும், கேரளா, ஆந்திராவில் சுமார் 300 பேரும் பலியாகியுள்ளனர்.
தாய்லாந்தில் 2,000 பேரும், அந்தமானில் 3,000 பேரும் பலியாகிவிட்டனர். மேலும் மலேசியா, மாலத்தீவுகளில் 51 பேரும், மியான்மாரில்52 பேரும் பலியாகியுள்ளனர்.
இந்தேனேஷியாவின் சுமத்ரா தீவின் அருகே ஏற்பட்ட மாபெரும் நில நடுக்கத்தையடுத்துக் கிளம்பிய பேரலைகள் சுமார் 7,000 கி.மீ. தூரம்பயணித்துள்ளன. கென்யா, சோமாலியா, மொரீசியஸ், ரீயூனியன் தீவுகள், செஷல்ஸ் தீவுகளும் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
பலியானவர்களின் எண்ணிக்கை 50,000த்தைத் தாண்டிவிட்ட சூழலில் இந்த பேரலைகளால் வீடிந்தவர்களின் எண்ணிக்கை பலலட்சங்களாகும்.
கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப் பெரிய இயற்கைச் சீற்றங்களில் இது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் பல நூறுபில்லியன் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications