போகி: டயர்கள் எரிக்க தடை
சென்னை:
போகி பண்டிகையையொட்டி டயர்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்கக் கூடாது என்று காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தடை விதித்துள்ளன.
வருகிற 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும்.சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் போகிப் பண்டிகை கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதை வலியுறுத்தி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பிரசாரத்தைதமிழ்நாாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் ஆகியோர்தொடங்கி வைத்தனர். அப்போது மாசுக் கட்டுப்பாட்டு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் கிரிஜா வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், போகியின்போது டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றைஎரிக்கக் கூடாது. அப்படி எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிக்கும்போது நச்சுவாயுக்கள் வெளியேறி, ஆஸ்த்மா, மூச்சுத் திணறல் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதற்குப் பதிலாக சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்திஏற்றி வைக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications