சூதாட்டம், மோதல்: மூவர் கொலை
திருவள்ளூர்:
திருவள்ளூரில் சூதாட்டம் தொடர்பாக கூலிப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.2 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஏரிக்கரைப் பகுதியில், பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான பேர் சூதாட்டத்தில்ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு கூலிப் படையைச் சேர்ந்த ரெளடிகள்.
சூதாட்டத்தின்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இது பின்னர் அடிதடியாக மாறியது. இதைத் தொடர்ந்து கத்திகளால்ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் ஜெயக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாபு, ராமு ரெட்டி ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த மோதலில் 2 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்து திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications