சுனாமி: பலியானோர் நினைவாக மரங்கள் நடும் அரசு

Subscribe to Oneindia Tamil

பொறையாறு:

Memorial park

நாகை மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக 77 நினைவு பூங்காங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இம் மாவட்டத்தில் சுனாமியால் அழிந்து போன 77 கிராமங்களிலும் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தப் பூங்காக்களில் இறந்தவர்களின் நினைவாக தென்னை மரங்கள் நடப்படும். பலியான ஒவ்வொருவர் பெயரிலும் இந்த மரங்கள்நடப்படும். அவற்றின் அருகில் மறைந்தவர்களின் பெயர் விவரம் கொண்ட கல் நடப்படும்.

இதற்கான மரக் கன்றுகளை மறைந்தவர்களின் உறவினர்களுக்கு அரசே வழங்க ஆரம்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் சாந்தஷீலா நாயர் இந்த மரக் கன்றுகளை இன்று செரத்தூர் கிராமத்தில் வழங்கினார்.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் நலத்துறை இணைச் செயலாளர் சுப்ரியா சாகு, மாவட்ட வன அலுவலர் பரூவா ஆகியோர் மரக் கன்றுகளைபலியானவர்களின் உறவினர்களிடம் இன்று வழங்கினர்.

இதற்கிடையே சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் பல்வேறு கிராமங்களில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளன அல்லதுஎரிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் தாங்களாகவே தென்னங் கன்றுகளை நட்டு வருகிறார்கள் அவர்களது குடும்பத்தினர்.

கடலோர கிராமங்களில் மட்டுமல்லாது தற்காலிக முகாம்களிலும் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நாகை மாவட்ட ஆட்சித் தலைவர்ராதாகிருஷ்ணனும் இதை ஊக்கப்படுத்துகிறார்.

தைரியம் ஊட்டும் புத்த பிட்சுக்கள்:

இதற்கிடையே திபெத்திய புத்த பிட்சுக்களின் குழு நாகப்பட்டிணம் வந்துள்ளது.

மறைந்தவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனை நடத்தி, பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இவர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.

தலாய் லாமாவின் சார்பில் வந்துள்ள இந்த 30 பிட்சுக்களும் தங்களுடன் 800 மூட்டை அரிசி, போர்வைகள் மற்றும் ஏராளமான நிவாரணப்பொருட்களையும் கொண்டு வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.

இந்த பிட்சுக்கள் ஊர், ஊராகச் சென்று தங்களது மொழியில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்காக பிரார்த்தனை நடத்துகின்றனர். மொழிபுரியாவிட்டாலும் இவர்களைச் சூழ்ந்து நின்று கண் மூடி பிரார்த்தனை செய்கின்றனர் பலியானவர்களின் உறவினர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+