சுனாமியால் களையிழந்த பொங்கல்

Subscribe to Oneindia Tamil

நாகை/கடலூர்:

The scene in Nagai

சுனாமி ஏற்படுத்திய பாதிப்பால் நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இந்த ஆண்டு பொங்கல்பண்டிகை களையிழந்து போனது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நேற்று உலகெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இருப்பினும் சுனாமியால் பாதிக்கப்பட்டதமிழக பகுதிகளில் பொங்கல் உற்சாகம் தொலைந்து போயிருந்தது.

நாகப்பட்டனம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொங்கலை வரவேற்கும் மன நிலையில் மக்கள் இல்லை. எங்கும் சோகமானமுகங்களே தென்பட்டன.

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பல சமூக நல அமைப்புகள் பொங்கல் செய்து வினியோகித்தனர். இதேபோலத்தான் கடலூர், குமரியிலும் நிலைமை இருந்தது.

தமிழகத்தின் இதர பகுதிகளில் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:

மதுரை அவனியாபுரத்தில் பொங்கலையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

இதில் திருப்பரங்குன்றம், காரியாபட்டி உள்ளிட்ட மதுரையைச் சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து 400க்கும் மேற்பட்டகாளைகள் கலந்து கொண்டன.

சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க இளைஞர்கள் கடுமையாக முயற்சித்து சிலர் அதில் வெற்றியும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்குதங்கக் காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகளிடம் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ரேக்ளா ரேஸ்:

இதேபோல, நாமக்கல் மாவட்டம் நாமகிப்பேட்டையில் பொங்கலையொட்டி ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.

ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி என ரகம் பிரித்து பந்தயம் நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+