மடத்தின் புது மேலாளர், டிரஸ்ட் அதிகாரியிடம் விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தின் புதிய மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி மகாதேவ அய்யர், கணக்காளர் ராமமூர்த்தி, கடிகாஸ்ரமம்டிரஸ்ட் அதிகாரி மணி ஆகியோர் இன்று காஞ்சி தனிப்படை போலீஸாரால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டனர்.
மகாதேவ அய்யரைத் தவிர மடத்தின் கணக்காளர் ராமமூர்த்தி, விஸ்வ இந்து பரிஷத் அகில உலக துணைத் தலைவர் வேதாந்தம், தமிழகநிர்வாகி மகேஷ்வரன் ஆகியோருக்கும் தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதில் வேதாந்தத்திற்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதை ஏற்று அவர் விசாரணைக்கு வர மறுத்து விட்டார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் வரவில்லை.
அதே நேரத்தில் சம்மன் பெற்ற பொள்ளாச்சி மகாதேவ அய்யர், மணி ஆகியோர் இன்று காலை போலீஸார் முன் ஆஜராயினர். சுந்தரேசஅய்யர் கைதானதால் மேலாளர் பொறுப்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் பொள்ளாச்சி மகாதேவ அய்யர் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யரிடம் மடத்தின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மணியிடம் ரகு கண்காணிப்பில் நடந்து வந்த கடிகாஸமரம் டிரஸ்டின் கணக்கு வழக்கு வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications