விபத்தில் கணவர் பலி: குழந்தைகளுடன் மனைவி கிணற்றில் குதிப்பு
காஞ்சிபுரம்:
மோட்டார் சைக்கிள் விபத்தில் சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் மரணமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தனதுஇரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தார்.
போலீஸ்காரரான விநாயகம் (30) கோட்டைக்காடு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தினமும் பணிக்கு சென்னைக்குமோட்டார் சைக்கிளில் வந்து செல்வார். இவரது மனைவி அமுதா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகன், மகள்உள்ளனர்.
உறவினரின் திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற விநாயகம், திரும்பி வரும்போது நிலை தடுமாறி, மரத்தின் மீது மோதினார்.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த அமுதா குழந்தைகளுடன் அங்கு ஓடி வந்தார். கணவர் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்த அமுதாவைஊர்க்காரர்கள் அமைதிப்படுத்தினர்.
இந் நிலையில் திடீரென அமுதா, குழந்தைகளுடன் காணாமல் போனார். அவரை ஊர் மக்கள் தேடியபோது பொதுக் கிணற்றில்குழந்தைகளுடன் அமுதா குதித்தது தெரிந்தது.
உடனடியாக மூன்று பேரையும் உயிருடன் மீட்ட கிராம மக்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications