ஜார்க்கண்ட்: ஆட்சி அமைக்கிறார் சிபு சோரன்-பாஜக கடும் எதிர்ப்பு
ராஞ்சி:
ஆட்சியமைக்க தங்களுக்கு போதிய பெரும்பான்மை உள்ளதாக பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி கூறி வரும் நிலையில்,ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்குமாறு ஜார்க்ண்ட் முக்தி மோச்சா தலைவர் சிபு சோரனுக்கு அம் மாநில ஆளுநர்அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைக்கிறது.
அரசியல் சட்டத்தின் 164(1)வது பிரிவின் கீழ் ஆட்சியமைக்க சோரனுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவரக் சட்டசபையில் வரும்21ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் சையத் ராஸி வெளியிட்ட செய்திக் குறிப்பில்தெரிவித்துள்ளார்.
இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முன்னதாக தங்களை ஆட்சிமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் 41எம்.எல்.ஏக்களையும் டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன் நிறுத்துவோம் என்று பாரதிய ஜனதாஎச்சரித்திருந்தது.
இங்கு ஆட்சியமைக்க மொத்தம் 41 இடங்கள் தேவை. இதில் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி 36இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. தனித்து 30 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும்வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 26 தொகுதிகளிலும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 12 இடங்களில் வென்றுள்ளனர்.
தங்களுக்கு ஆட்சியமைக்க 5 எம்.எல்.ஏக்களே தேவைப்படுவதால் சுயேச்சைகள் 5 பேருக்கு பா.ஜ.க வலைவீசியது. அவர்களும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தங்களுக்கு 41 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என்று அம் மாநில ஆளுநர் சையத் ராஸியிடம் பாஜக கோரிக்கை விடுத்தது. 41 எம்எல்ஏக்களையும்அவர் முன் ஆஜர்படுத்தியது.
ஆனால், தங்களுக்கு 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ்-சிபுசோரன் கூட்டணி கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து பிரிந்து தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரு சுயேச்சைவேட்பாளருடன் சென்று, கவர்னரை சந்தித்தார் சிபு சோரன்.
இதையடுத்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 12 பேரையும் நேரில் அழைத்து அவர்களிடம் பேசிய பிறகேஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்துத் தீர்மானிக்கப் போவதாக கவர்னர் ராஸி தெரிவித்தார்.இதையடுத்து அவர்களை தனித்தனியே அழைத்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.கவுக்குப் பதிலாக சோரனை ஆட்சியமக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதைக் கண்டித்து கவர்னர் மாளிகை முன் பா.ஜ.கவினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நாடாளுமன்றதிலும் இந்த விவகாரம் வெடித்தது. காங்கிரசுக்கு ஆதரவாக ஆளுநர்செயல்படுவதாகவும், தங்களை ஆட்சியமைக்க அழைக்காமல் வேண்டுமென்றே ஆளுநர் காலதாமதம்செய்வதாகவும் கூறி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கட்சியின் தலைவர் அத்வானி தலைமையில் பாஜகஎம்பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அமளி, துமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications