சென்னை: நகைக்கடையில் 300 பவுன் நகை கொள்ளை
சென்னை:
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை தி.நகர் பிரகாசம் சாலையில் அபிராமி ஜூவல்லர்ஸ் என்ற பிரபலமான நகைக் கடை உள்ளது. இந்த நகைக் கடையில்நேற்று அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர், கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டுள்ளனர்.
அதன் பின்னர் கடைக்குள் நுழைந்து 300 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
கொள்ளையர்கள் நகைகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தபோது, கடையில் இருந்த எச்சரிக்கை அலாரம், அதைப்பொருத்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஒலித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், நகைக் கடை உமையாளர்சேஷ மகாதேவனுக்குப் போன் செய்து தெரிவித்துள்ளனர்.
அதே தெருவில்தான் சேஷ மகாதேவனின் வீடும் உள்ளதால் உடனடியாக அவர் விரைந்து வந்து கடையின் முன் பகுதியைப்பார்த்துள்ளார். கடை பூட்டு சரியாக இருப்பதைப் பார்த்த அவர் திரும்பிச் சென்று விட்டார். பின்பக்கம் சென்று அவர்பார்த்திருந்தால் கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்திருக்கலாம்.
இந்தசம்பவம் குறித்து பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications