செளதி: இந்தியருக்கு மன்னிப்பு வழங்க கோரிக்கை
துபாய்:
கார் விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக செளதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய டிரைவருக்குமன்னிப்பு வழங்குமாறு அந் நாட்டு அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் குமார். செளதி அரேபியாவில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். 3வருடங்களுக்கு முன் ஜெட்டா- ரியாத் நெடுஞ்சாலையில் இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் இவரது காரில் இருந்த செளதிஅரேபியாவைச் சேர்ந்த 7 பேர் பலியானார்கள்.
ஆனால், அவ்வளவு தொகையை குமாரால் தர முடியாததால் கடந்த 3 வருடங்களாக அவர் சிறையிலேயே உள்ளார்.
இது தொடர்பாக கோழிக்கோடு மாவட்ட கலெக்டர், துபாயிலுள்ள இந்திய தூதரகத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிநாராயணனுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து குமாருக்கு மன்னிப்பு வழங்குமாறு செளதி அரசிடம், இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. நாராயணன் மூலம் செளதிஅரசிடம் தரப்பட்டுள்ள அந்த மனுவில், குமார் ஓட்டிச் சென்ற காரின் மீது பின்னால் வேகமாக வந்த ஒரு டிரக் மோதியது. இதனால்தான் குமாரின் கார் விபத்தில் சிக்கியது.
எனவே குமாரின் மீது எந்தத் தவறும் இல்லை. மேலும் குமார் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரால் அவ்வளவுபெரிய தொகையை கட்ட முடியாது. எனவே குமாருக்கு பாவ மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications