ஆதிக்கு "ஆப்பு" வைத்து நண்பரான "ஆயில்" பாண்டியன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அல்டாப் ஆதிகேசவனின் கூட்டாளியான ஆயில் பாண்டியனும் முன்பு ஆதியால் ஏமாற்றப்பட்டு பின்னர் கூட்டாளியானவர் என்றுதெரியவந்துள்ளது.

ஆதிகேசவனின் கூட்டாளிகளான மிகிர், ஆயில் பாண்டியன், அண்ணன் மகன் சிவக்குமார் மற்றும் முக்கியக் கூட்டாளியான ஜெயவீரன்,யுவராஜ் ஆகியோரில் ஜெயவீரன், யுவராஜைத் தவிர மற்ற அனைவரும் பிடிபட்டுள்ளனர்.

இவர்களில் ஆயில் பாண்டியன் கதை மிகவும் சுவாரஸ்யமானது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு டேங்கர் லாரிகளை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் பாண்டியன், ஆயில் பாண்டியன்ஆனார். ஆரம்பத்தில் இவர் ஆதி கேசவனிடம் கடன் கேட்டுள்ளார். வழக்கம் போல கமிஷனை (ரூ. 4 லட்சம்) வாரிப் போட்டுக் கொண்டுசெக்கை கிழித்து நீட்டியுள்ளார் ஆதி.

ஆனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததும், பாண்டியன் கொந்தளித்தார். தனக்குப் பழக்கமான, வட சென்னையின் பிரபல தாதாவாகமுன்பு விளங்கிய சேராவின் அடியாட்கள் சிலரை அழைத்துக் கொண்டு ஆதியை பார்த்துள்ளார். சேராவின் கூட்டாளிகள், ஆதியை அழித்துவிடுவோம் என்று கூறி மிரட்டவே, பயந்து போன ஆதி, பணத்தைக் கொடுத்து விடுவதாக கூறி உடனடியாக ரூ. 2 லட்சம் பணத்தைக்கொடுத்து விட்டார்.

அதன் பிறகு ஆயில் பாண்டியனின் பலத்தைப் புரிந்து கொண்ட ஆதி, அவரை தன்னுடனேயே வைத்துக் கொள்ள முடிவு செய்து நட்புக் கரம்நீட்டியுள்ளார். பாண்டியனும் பணம் வாங்கிக் கொண்டு ஆதிக்கு துணையாக இருந்து வந்துள்ளார்.

ஆள் வைத்து அடிப்பது, போலீஸாரை சரிக்கட்டுவது, பணம் கேட்டு வருபவர்களை மிரட்டி அனுப்புவது ஆகிய வேலைகளை ஆதியின்சார்பில் ஆயில் பாண்டியன்தான் செய்து வந்துள்ளார் என்பது பாண்டியனின் வாக்குமூலம் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

ஆயில் பாண்டியன் மூலம்தான் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதிகேசவன் பணத்தை அள்ளி வழங்கியுள்ளார்.

பார்த்தால் புலி.. உண்மையில், பெருச்சாளி:

ஆதிகேசவன் பார்ப்பதற்குத்தான் வாட்ட சாட்டமாக மிரட்டலான தோற்றத்தில் உள்ளார். கொஞ்சம் அதட்டினால் கூட பயந்து போய்விடுகிறாராம். அந்த அளவுக்கு பயந்த சுபாவம் உடைய ஆதி, அடியாட்கள் பலத்தில்தான் அவர் இத்தனை காலம் ஆட்டம் போட்டுவந்துள்ளார்.

தனது உயிருக்கு யார் மூலமாவது ஆபத்து விடும் என்ற பயத்தின் காரணமாகத்தான், வீட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் ஏகப்பட்ட ரகசியகேமராக்களை வைத்துள்ளார்.

வெளியில் செல்லும்போதும் ஏகப்பட்ட அடியாட்கள் புடை சூழத்தான் போவாராம். இப்போது கூட ஜாமீன் கோராமல் அவர் இருப்பதற்குக்காரணம், வெளியே வந்தால் யாராவது போட்டுத் தள்ளி விடுவார்கள் என்ற பயத்தால் தான் என்கிறார்கள்.

இதை போலீஸாரிடமே ஆதி சொல்லிப் புலம்பியபோது, போலீசார் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.

உங்கள் பாதுகாப்பிலேயே இருந்து விடுகிறேன், ஜாமீனெல்லாம் போடப் போவதில்லை என்று போலீசாரிடம் கூறி வருகிறாராம் ஆதி. இதுஎப்படி இருக்கு?

ஜெயவீரனை பிடிக்க மும்பைக்கு படை:

இதற்கிடையே ஆதிகேசவனின் நெருங்கிய கூட்டாளியான ஜெயவீரனைப் பிடிக்க மும்பைக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

ஜெயவீரன் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்களில் யுவராஜின் மனைவி ஒரு டாக்டர்.சென்னை தி.நகிரில் க்ளினிக் வைத்துள்ளார்.

ஜெயவீரனும், யுவராஜும் ஆதிகேசவனின் பல மோசடிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். ஜெயவீரன்தான், இந்தியா முழுவதும்ஏஜென்டுகளை ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்ய உதவியவர். தூத்துக்குடிக்கு இவர் பல கோடிரூபாய்களுடன் தப்பி ஓடி விட்டதாக முதலில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அவரைப் பிடிக்க தூத்துக்குடிக்கு தனிப்படையினர் விரைந்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து மும்பைக்கு ஜெயவீரன்தப்பி விட்டது தெரியவந்தது. இதையடுத்து மும்பைக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+