பூத் ஏஜென்டுகள்: தேர்தல் ஆணையம் இன்னொரு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களையேதங்களது பூத் ஏஜென்டாக நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு ஆணையம் உத்தரவு அனுப்பியுள்ளது.

இது குறித்து குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஏஜென்டின் முக்கியமான கடமைகளில் ஒன்று, ஓட்டுப் போட வரும்வாக்காளர்களை அடையாளம் கண்டு அதன் மூலம் உண்மையான வாக்காளர்களே ஓட்டு போடுகிறார்கள் என்பதை உறுதிசெய்வதுதான்.

இந்த முக்கியமான கடமையை தேர்தல் ஏஜென்டு நிறைவேற்றுவதன் மூலம் தேர்தல்களில் கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்கபெரும் பங்கு ஆற்றுகிறார். இந்த முக்கியமான கடமையை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்டஇடத்தை சேர்ந்தவராக அந்த தேர்தல் ஏஜென்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

கடந்த தேர்தல்களில் இத்தகைய தேர்தல் ஏஜென்டுகள் வாக்குச் சாவடி பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் இருந்தும் மற்றமாவட்டங்களில் இருந்தும் பல இடங்களில் நியமிக்கப்பட்டனர் என்ற தகவல் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக மத்திய தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாக்குச் சாவடிக்கு வெளியே உள்ள பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தேர்தல் ஏஜென்டுகள் வாக்குச் சாவடிக்குள்பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இத்தகைய நபர்கள் அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களோடு அறிமுகம் இல்லாதவர்கள்.நியாயமான, சுதந்திரமான தேர்தல் நலன் கருதி வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்படும் தேர்தல் ஏஜென்டுகள் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த வாக்குச் சாவடிக்கு வெளியே உள்ள பகுதியைச் சேர்ந்தவர்களை தேர்தல் ஏஜென்டாகவேட்பாளர்கள் நியமிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று குப்தா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+