கருணாநிதிக்கு பிரதமர், சோனியா பிறந்த நாள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 82வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்தியஅமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) கருணாநிதிக்கு 82 வயது முடிந்து 83 வயது பிறக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை சிஐடி காலனியிலுள்ள வீட்டில் மரக்கன்று நட்டகருணாநிதி, பின்னர் கோபாலபுரம் வீட்டிற்கு சென்று பெற்றோரின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

ஆளுநர் பர்னாலா, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன், உசேன் மற்றும் பலர் கோபாலபுரம் வீட்டிற்கு வந்து கருணாநிதியைவாழ்த்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி சக்கர நாற்காலியில் வந்து கருணாநிதியை வாழ்த்தினார்.

பின்னர் அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு தொண்டர்கள் புடைசூழ சென்று கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளள்அன்பழகன், மத்திய அமைச்சர்கள் ரகுபதி, ராஜா, ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், சற்குண பாண்டியன், பரிதி இளம்வழுதி மற்றும் ஏராளமானோர்சென்றனர்.

பெரியார் நினைவிடம் சென்ற கருணாநிதியை, கி.வீரமணி வரவேற்றார்.

பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த அவர், கலைஞர்அரங்கில் தொண்டர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றார். தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருநாவுக்கரசர், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், திண்டிவனம் ராமமூர்த்தி, எல்.கணேசன், மு.கண்ணப்பன் மற்றும்ஏராளமானோர் அண்ணா அறிவாலயத்திற்கு நேரடியாக வந்து கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீதரன் தலைமையில் 82 வகையான சீர்வரிசைப் பொருட்கள் கருணாநிதியிடம் வழங்கப்பட்டன. 82தட்டுகளில் ஆண், பெண்கள் இந்க சீர்வரிசைப் பொருட்களை கருணாநிதியிடம் கொடுத்து வாழ்த்தினார்கள்.

பிரதமர், சோனியா வாழ்த்து:

82வது பிறந்த நாள் கொண்டாடும் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள்மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்த நாள் செய்தியாக கருணாநிதி கூறுகையில், மக்களாட்சியின் மாண்பினை போற்றி சரிசமமாக சமத்துவ உணர்வோடு அனைத்துப் பிரிவு மக்களும் நலன்அனுபவித்திட வேண்டுமென்றும் அதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் சமத்துவ, சமதர்ம வாழ்வு என்ற குறிக்கோளை எய்திட லட்சியப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதே என்னுடைய 82வது பிறந்த நாளில் தமிழக மக்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் விடுக்கும்வேண்டுகோளாகும்.

இந்த வயதிலும் நான் சுறுசுறுப்பாக இருப்பதற்கு ஒரே காரணம் என்னுடைய தொண்டர்கள் தான் என்றார்.

மாலையில் அண்ணா நகர் புல்லா ரெட்டி அவென்யூ பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, புதுவை முதல்வர் ரங்கசாமி,கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியை வாழ்த்திப் பேசுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+