வாக்காளர் பட்டியல்: கவர்னருக்கு திமுக நன்றி
சென்னை:
ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து தமிழக தேர்தல் கமிஷனரை நேரில் அழைத்து விசாரித்தகவர்னர் பர்னாலாவை திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் நேரில் சந்தித்துநன்றி தெரிவித்தனர்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் ஆளும் கட்சியினரால் செய்யப்படும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து திமுக கூறியகுற்றச்சாட்டுக்களை விசாரிக்க தமிழக தேர்தல் கமிஷனரை அழைத்து பேசியதற்கு கவர்னர் பர்னாலாவிடம் நன்றி தெரிவித்தனர்.
தலைமை தேர்தல் கமிஷனின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகள் விழுப்புரத்தில் ஆய்வு நடத்தியதன்அடிப்படையில், தவறு செய்துள்ள அதிகாரிகள் மீதும் அதற்கு தூண்டுதலாக இருந்த ஆளும் கட்சியினர் மீதும் நடவடிக்கைஎடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கவர்னரிடம் திமுகவினர் கோரிக்கை வைத்தனர் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications