சென்னை: ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ரயில்வே அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர் உட்பட பல பொருட்கள் எரிந்துநாசமாயின.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இரண்டாவதுமாடியில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 7.30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கம்ப்யூட்டர், குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட பல முக்கிய பொருட்கள் எரிந்து நாசமாயின.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications