சுற்றுலா சென்ற 50 மாணவிகள் மாயம்!
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியிலிருந்து சுற்றுலா சென்ற 50 மாணவிகள் வீடுதிரும்பாததால் அவர்களது பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பண்ருட்டி அருகே உள்ள பெரியாங்குப்பம் கிராமத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும்50 மாணவிகள், பள்ளியிலிருந்து சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றனர்.
செவ்வாய்க்கிழமை சென்ற இவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதற்றமடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்றுவிசாரித்துள்ளனர். அப்போது பள்ளியிலிருந்து யாரையும் சுற்றுலாவுக்கு அனுப்பவில்லை என்று ஆசிரியர்கள்தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு தகவல் போனது. முத்தாண்டிக் குப்பம் காவல் நிலையத்திலும் சிலபெற்றோர்கள் புகார் கொடுத்தனர். முதல்வருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் எங்கே சென்றனர், யார் அவர்களைஅழைத்துச் சென்றது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications