நெல்லையில் திமுக முப்பெரும் விழா
சென்னை:
திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17ம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக தலைமை நேற்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்துவதென ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாகும்.
இந்த ஆண்டு முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17ம் தேதி அன்று நெல்லையில் நடத்தப்படுகிறது. இவ்விழாவை சிறப்பாகநடத்த நெல்லை மாவட்டச் செயலர் ஆவுடையப்பன், தேர்தல் பணிச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியம்,
அவைத்தலைவர் சுப.சீத்தாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் மைதீன் கான் எம்.எல்.ஏ., மாநில ஆதிதிராவிடர் நலக்குழுச்செயலர் தங்கவேலு, நெல்லை மாநகர செயலர் மாலை ராஜா, நெல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முத்துராமலிங்கம்ஆகியோர் விழா குழுவினராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications