72,000 போலி வாக்காளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
சென்னை:
வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் 72,000 பேரின் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
அவை அனைத்துமே போலி வாக்காளர்கள் என்று எதிர்க் கட்சிகள் குரல் எழுப்பின. இதையடுத்து விண்ணப்பங்களை தீவிரமாகபரிசீலிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த விண்ணப்பங்களைதேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீவிர பரிசீலனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 72,000விண்ணப்பங்கள், சரியான தகவல்கள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களில் வாக்காளரின் கையெழுத்து இல்லை, முகவரி சரியாக இல்லை, பலருடைய வயது 18க்கும்குறைவாக இருந்தது. இந்தக் காரணங்களால் இவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். வேறு யாருடைய கையெழுத்துஇருந்தாலும் அந்த விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
இந்த விண்ணப்பங்கள் தவிர மற்ற விண்ணப்பங்கள் மீதும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பரிசீலனைக்குப் பின்னர் அவைகுறித்து முடிவு செய்யப்படும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட தொகுதிகள் உள்பட 39 தொகுதிகளின்வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்படும். அதன் மீது ஆட்சேபனை இருந்தால் ஆகஸ்ட் 16ம்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார் குப்தா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications