மலிவு விலை கம்ப்யூட்டர் விற்பனை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மலிவு விலையில் (ரூ. 9,990) கம்ப்யூட்டர் விற்பனையை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறன் இன்று தொடங்கி வைத்தார்.
எச்.சி.எல். நிறுவனம் ரூ. 9,990க்கு கம்ப்யூட்டர் தயாரித்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் விற்பனை சென்னையில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கம்ப்யூட்டர்தேவையை உணர்ந்தவர்களுக்கு இந்த மலிவு விலை நிச்சயம் உதவும்.
2010ம் ஆண்டுக்குள் நாட்டில் 7.5 கோடி பேருக்கு கம்ப்யூட்டர் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சராசரிமக்களுக்கு பயன்படும் வகையில் மிகவும் குறைந்த விலையில் கம்ப்யூட்டர் தயாரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும்என்றார் தயாநிதி மாறன்.












Click it and Unblock the Notifications