மைசூர்: கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 50,000 கன அடி நீர் திறப்பு
மைசூர்:
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் விநாடிக்கு 80,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பும் நிலைக்கு வந்து விட்டது.மொத்த கொள்ளளவான 124 அடியை நெருங்குவதற்கு இன்னும் 3 அடி நீரே பாக்கி உள்ளது.இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையைத் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. சனிக்கிழமை இரவு முதல்அணை திறந்து விடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
திங்கள்கிழமை இது விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று இரவு விநாடிக்கு 80,000 கன அடியாக இதைஅதிகரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கே.ஆர்.எஸ். அணைக்கு தற்போது விநாடிக்கு 32,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணையிலிருந்துதிறக்கப்பட்டுள்ள நீர் செவ்வாய்க்கிழமை இரவு அல்லது மறு நாள் காலையில் மேட்டூர் அணையை வந்தடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு மேலும்அதிக நீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 87 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 31,000 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications