லண்டன் விமானத்தில் கோளாறு: டெல்லியில் தரையிறக்கப்பட்டது
டெல்லி:
மும்பையிலிருந்து 315 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு காரணமாக நேற்று இரவுடெல்லியில் தரையிறக்கப்பட்டது. பின் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு நள்ளிரவு 2 மணியளவில் லண்டன் புறப்பட்டுசென்றது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மும்பையிலிருந்து லண்டனுக்கு 315 பயணிகளுடன் ஏர் இந்தியாவிமானம் புறப்பட்டு சென்றது. இரவு 8.30 மணியளவில் இந்த விமானம் கராச்சி அருகே பறந்து கொண்டிருந்த போதுவிமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.உடனடியாக விமானி மும்பை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டார். மும்பையில் கடுமையாக மழை பெய்துகொண்டிருந்ததால் விமானத்தை டெல்லிக்கு கொண்டு செல்லுமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் உடனடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இரவு 10.45 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் இருந்தபயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
பின் கோளாறு சரி செய்யப்பட்டது. இதன் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் அந்த விமானம் லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.இதனால் டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை அன்று மும்பை விமான நிலையத்தில் 315 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் வழுக்கி சேற்றில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications