ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மிரட்டல்: போலி மத்திய அரசு அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி என்று கூறிக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மிரட்டிய நபரை சிபிசிஐடிபோலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டிருப்பவரின் பெயர் கிருஷ்ணசாமி குமார் சாஸ்திரி என்ற ராமச்சந்திரன். போலீஸ் வட்டாரத்தில் இவருக்கு"420 கிருஷ்ணன் என்று பெயர்.

கடந்த மாதத் தொடக்கத்தில் தமிழக அரசின் வேளாண்துறை உதவி இயக்குனர் சுப்ரமணியன் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்களைசுமத்தி ஆளுநர், தலைமைச் செயலாளர், வேளாண்துறை செயலாளர், வேளாண்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார்மனுக்கள் வந்தன.

சுப்ரமணியன் முன்பு தர்மபுரியில் வேலை பார்த்து வந்தார். தற்போது வாணியம்பாடியில் உள்ளார். சுப்ரமணியன் மீது ஊழல்புகார்களை சுமத்தி வந்த கடிதங்களில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அலுவலக முத்திரை இருந்தது.

மத்திய அரசின் அடையாளச் சின்னம் கடிதத்தில் இருந்தது. இந்தக் கடிதங்கள் மீது நடவடிக்கை இல்லாததால், தொலைபேசிமூலம் வேளாண்துறை செயலாளர் லீனா நாயர், ஆணையர் ஜக்மோகன்ராஜு ஆகிய இரு அதிகாரிகளுக்கும் ராமச்சந்திரன்மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், ஊழல் செய்யும் சுப்ரமணியத்தைக் காப்பாற்றும் வகையில் செயல்படும் இந்த இரு அதிகாரிகளையும் உடனடியாகஇடமாற்றம் செய்யுமாறு தலைமைச் செயலாளருக்குக் கடிதம் வந்தது.

இந்தக் கடிதங்கள் சந்தேகத்திற்குரியவையாக இருந்ததால், வேளாண்துறை செயலாளர் லீனா நாயர் மற்றும் வேளாண்துறைஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு இருவரும் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அமீத் வர்மாவிடம் (முத்திரைத் தாள் மோசடியில் சிக்கிஇவர் தற்போது பதவியிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது) புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரின் பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராமச்சந்திரன் சிக்கினார்.பெங்களூரில் இருந்தபடி சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் அவர்டெல்லியிலிருந்து பேசுவது போல பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான சிபிசிஐடி குழு பெங்களூர் விரைந்தது. அங்குள்ள மஞ்சுநாத்நகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ராமச்சந்திரனை போலீஸ் குழு மடக்கிப் பிடித்தது.

அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ராமச்சந்திரனுடையசொந்த ஊர் கிருஷ்ணகிரி. பெங்களூரில் சட்டப் படிப்பு முடித்த அவர், பல ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூரில்செட்டிலாகி விட்டார்.

ஆரம்பத்தில் சில காலம் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் மோசடித் தொழிலுக்கு மாறினார். பெரிய அதிகாரிஎன்று கூறிக் கொண்டு பல இடங்களில், பல முக்கிய நபர்களை மிரட்டிப் பணம் பறித்துள்ளார்.

தற்போதும் கூட தர்மபுரியைச் சேர்ந்த வேளாண்துறை அதிகாரி ஒருவருக்கும், உதவி இயக்குனர் சுப்ரமணியத்திற்கும் இடையேஏற்பட்ட தகராறு காரணமாகவே, தர்மபுரி அதிகாரியின் தூண்டுதலின் பேரில் ஊழல் புகார் சுமத்தி கடிதம் எழுதியுள்ளார்.

ராமச்சந்திரன் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியாவின் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. அவரிடமிருந்து 8செல்போன் சிம் கார்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ராமச்சந்திரனின் திருவிளையாடல்கள் குறித்து விரிவானவிசாரணையின் போது தெரிய வரும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+