அனைவருக்கும் கட்டாய கல்வி: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
அனைவருக்கும் கட்டாயக் கல்வி கிடைக்க நான் என்னை போராளியாகவே மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் எனபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை என்ற தலைப்பில் சென்னையில்கருத்தரங்கம் நடந்து வருகிறது.கருத்தரங்கத்தை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்தார். அதில், ராமதாஸ், மத்திய அமைச்சரும் ராமதாசின்மகனுமாகிய அன்புமணியின் மனைவி செளம்யா, கல்வியாளர்களான முன்னாள் துணை வேந்தர் வி.சி. குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், பழனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் பேசுகையில்,
ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டும் அனைவருக்கும் தரமான, கட்டாயக் கல்வி கொடுப்பது தான்.இதை நான் சொல்லவில்லை. நோபல் பரிசு வென்ற மேதை அமார்தியா சென் கூறியுள்ளார்.
நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் தந்த அறிக்கைகள் யாவும்நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதுவரை சமர்பிக்கப்பட்ட முக்கிய கல்விக் குழுக்களின் பரிந்துரைகளை கடந்த 6 மாதமாக ஆய்வு செய்தோம். இப்போதுஅவற்றின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து அதை இந்த கருத்தரங்கில் விவாதித்து,ஆய்வு செய்ய இருக்கிறோம்.
இங்கு வந்துள்ள கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை முன் வைக்கலாம். அதை நடைமுறைப்படுத்த நான் முடிந்தவரைபாடுபடுவேன். அதற்காக நான் என்னை ஒரு போராளியாகவே மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி, சுமையில்லாத கல்வி, கட்டணம் இல்லாத கல்வி, தரமான கல்வி, தாய்மொழி வழிக் கல்விகிடைக்க வேண்டும்.
அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம். தேவைப்பட்டால் போராடுவோம் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications