ரெளடி வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுக்க போலீஸ் மனு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை ரெளடி வரிச்சியூர் செல்வத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கஅனுமதிக்கக் கோரி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரையை சேர்ந்தவன் பிரபல ரெளடி வரிச்சியூர் செல்வம். இவன் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 25க்கும் மேற்பட்டவழக்குகள் உள்ளன. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த செல்வத்தை கண்ணன் என்ற எலக்டிரிகல் கடை உரிமையாளரைகொலை செய்ய முயற்சித்த வழக்கில் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கேரள மாநிலத்திலிருந்து டாக்சிகளைவாடகைக்குப் பிடித்துக் கொண்டு மதுரைக்கு வரும் செல்வம், பின்னர் டிரைவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டுகாருடன் தப்பி விடுவான்

இதுபோல 20க்கும் மேற்பட்ட கார்களை கேரளாவிலிருந்து கடத்தி வந்து விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. கார்கடத்துலுக்கு செல்வத்திற்கு தேவி மீனாட்சி என்ற பெண் டாக்டர் உதவியாக இருந்துள்ளது தெரியவந்தது.

சிவகங்கையை சேர்ந்த ஒரு சாமியாருக்கும், தனக்கும் இருந்த உறவை கெடுத்ததாகக் கூறி தனது கூட்டாளியான ஆனந்தன்என்பவனை செல்வத்தின் ஆட்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஆனந்தன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். இதைபோலீஸார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.

மேலும் தன்னைப் பற்றி வழக்கறிஞர் ஒருவரிடம் தவறாக கூறியதற்காக அய்யனார் என்பவரை செல்வத்தின் ஆட்கள் காரைஏற்றி கொலை செய்தனர். இதை விபத்து வழக்காக போலீஸார் பதிவு செய்தனர்.

இந்த தகவலை தற்போது போலீஸாரிடம் செல்வம் கூறியுள்ளதால் 2 வழக்குகளையும் கொலை வழக்காக மாற்ற போலீஸார்முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே வரிச்சியூர் செல்வத்தின் மனைவி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடந்த 1ம் தேதி ஹேபியஸ் கார்பஸ் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஜூலை மாதம் 31ம் தேதி போலீஸாரால் பிடிக்கப்பட்ட தனது கணவர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படவில்லை.

அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்என்று கோரியிருந்தார். இந்த மனு கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனு விசாரணைக்கு வருவதற்குமுன்னதாக செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதற்காக 3ம் தேதி காலையிலேயே ஆஜர்படுத்தி அவனைசிறையில் அடைத்தனர்.

இதனால் செல்வத்திடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. எனவே செல்வத்தை மீண்டும் போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து செல்வத்தை 8ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி சுபத்ரா, சிறைத்துறை அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+